சன்னி லியோன் கோலிவுட் சம்பளம் என்ன தெரியுமா?

avatar

சன்னி லியோனுக்கு அறிமுகம் தேவையா? பாலிவுட்டை கலக்கிக் கொண்டிருக்கும் சன்னி லியோன் அடுத்து தமிழை குறி வைத்து களம் இறங்கியிருக்கிறார். ஏற்கெனவே வடக்றி படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடிய சன்னி லியோன் இப்போது கதாநாயகியாக தமிழில் அறிமுகமாக உள்ளார். பொட்டு வடிவுடையான் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார் சன்னி லியோன். தொடர்ந்து தமிழில் நடிக்க திட்டமிட்டிருக்கிறாராம்.

சரி சம்பளம்? இதுவரை பாலிவுட்டுக்காக பெரிய அளவில் சம்பளம் வாங்கிக்கொண்டிருந்த சன்னி லியோன் தமிழுக்காக தனது சம்பளத்தை அதிரடியாகக் குறைத்திருக்கிறாராம். அறிமுகமாகும் படத்துக்கு ஒரு கோடி கேட்டவர் பின்னர் 80 லட்சத்துக்கு ஓகே சொன்னதாக தகவல் அடிபடுகிறது. சன்னிக்கு தமிழ் மட்டுமல்லாது ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் என்று ஐந்து மொழிகளில் மார்க்கெட் இருப்பதால் இந்த சம்பளத்தை கொடுக்க தயாராக உள்ளனர் தயாரிப்பாளர்கள். இந்த செய்திகள் எல்லாம் முன்னணி ஹீரோயின்கள் வயிற்றில் புளியை கரைத்திருக்கிறதாம்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!