டெல்லி மற்றும் மும்பையில் அனுஷ்கா - கோஹ்லி ரிசப்ஷன்!

avatar

டெல்லி: இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவை கரம் பிடித்தார். இத்தாலியின் மிலன் நகரில் இவர்களின் திருமணம் இனிதே முடிந்தது. இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராத் கோஹ்லி, பாலிவுட் நடிகை அனுஷ்கா சர்மாவுடன் கடந்த 20ந்ம் ஆண்டு ஷாம்பு விளம்பரம் ஒன்றில் இணைந்து நடித்தார். பின் காதலில் விழுந்த இருவரும் நட்சத்திர ஜோடியாக வலம் வந்தனர். இவர்களது திருமணம் முடிந்ததை அடுத்து, இந்தியாவில் திருமண வரவேற்பு விருந்து நடைபெற இருக்கிறது.

விராட் கோஹ்லிக்கும், பாலிவுட்டின் முன்னணி நாயகிகளில் ஒருவரான அனுஷ்கா சர்மாவுக்கும் நேற்று இத்தாலியில் திருமணம் நடைபெற்றது. திருமணம் பற்றிய தகவல்களை ரகசியமாகக் காத்து வந்த அவர்கள், நேற்று முன்தினம் இரவு அவர்களது திருமணம் பற்றி அதிகாரப்பூர்வமாக அறிவித்தனர்.

இத்தாலியிலுள்ள மிலன் நகரில் அனுஷ்கா சர்மாவை கோஹ்லி கரம் பிடித்தார். பலத்த பாதுகாப்புக்கிடையே டஸ்கனியிலுள்ள ஆடம்பர ரிசார்ட் ஒன்றில் நடந்த இத்திருமணத்தில் இருவரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்தில் அவர்களது நெருங்கிய உறவினர்களும், குடும்ப நண்பர்கள் சிலரும் மட்டுமே கலந்து கொண்டதால், திருமண வரவேற்பு விருந்திற்கு திரையுலகத்தினரையும், கிரிக்கெட் வீரர்களையும் அழைக்க உள்ளார்களாம்.

திருமண வரவேற்பு விருந்திற்கான அழைப்பிதழும் தயாராகியுள்ளது. வரும் டிசம்பர் 21-ம் தேதி டெல்லியில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இரவு 8.30-க்கு மணிக்கு திருமண வரவேற்பு விருந்து நடைபெற உள்ளது. டெல்லியில் நடைபெறும் திருமண வரவேற்பிற்குப் பிறகு அடுத்து டிசம்பர் 26-ம் தேதி மும்பையிலும் திருமண வரவேற்பு நடக்கும் எனத் தெரிகிறது. விராட் கோஹ்லி, அனுஷ்கா இருவரும் மும்பை, வொர்லி பகுதியில் புதிய வீட்டில் குடிபுக இருக்கிறார்களாம்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!