முழுசா பழைய பன்னீர்செல்வமாகவே மாறிய அஜீத்

avatar

சென்னை: விசுவாசம் படத்திற்காக அஜீத் பெப்பர் லுக்கிற்கு மாறியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது. மங்காத்தா படத்தில் அஜீத் சால்ட் அன்ட் பெப்பர் லுக்கில் வந்தார், ரசிகர்கள் கொண்டாடினார்கள். அதில் இருந்து அதே லுக்கை மெயின்டெய்ன் செய்தார். விவேகம் படத்தில் பெப்பர் எல்லாம் போய் சால்ட் மட்டும் தான் இருந்தது.

தல தயவு செய்து தலைமுடிக்கு டை அடித்து பழையபடி வாங்க தல என்று ரசிகர்கள் கோரிக்கை வைத்தது அவர் காதில் விழுந்ததோ இல்லையோ சிவாவுக்கு கேட்டுவிட்டது.

அஜீத், சிவா நான்காவது முறையாக இணைந்துள்ள விசுவாசம் படத்தில் தல டை அடித்து கருப்பு முடியில் ஸ்டைலாக வருவார் என்றார் சிவா. இந்நிலையில் அஜீத் பெப்பர் லுக்கில் இருக்கும் வீடியோ வெளியாகி வைரலாகியுள்ளது.

அஜீத் பழையபடி கருப்பு முடிக்கு மாறியுள்ளதை பார்த்து அவரது ரசிகர்கள் சூப்பர் தல, நீ அசத்து என்று கூறி மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் அந்த வீடியோவையும் சமூக வலைதளங்களில் ஷேர் செய்து வருகிறார்கள்.

முன்னதாக அஜீத் தனது மகனின் பள்ளியில் நடந்த விழாவுக்கு சென்றபோது அவர் தலைமுடி ஏதோ வித்தியாசமான நிறத்தில் இருந்தது. இந்நிலையில் தற்போது முழுவதும் கருப்பு நிறமாக மாறியுள்ளது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!