டிவி நிகழ்ச்சி, விமல் படம், அப்பள விளம்பரம்: கலக்குற ஜூலி

avatar
சென்னை: அப்பள விளம்பரத்தில் ஜூலியை பார்த்த ஜூலி வெறியன்ஸ் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எடுத்த நல்ல பெயரை பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கெடுத்துக் கொண்டார் ஜூலி. அதில் இருந்து நெட்டிசன்ஸ் அவரை திட்டித் தீர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இது ஜூலிக்கும் நன்றாகவே தெரியும்.

தன்னை யார் கலாய்த்தாலும், திட்டினாலும் அதை எல்லாம் ஜூலி கண்டுகொள்வதே இல்லை. அவர் தான் கண்டுக்க மாட்டேன் என்கிறார் என நெட்டிசன்ஸும் ஓயும் இல்லை.

கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் ஜூலி விமல் படத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் அவர் அருணா அப்பள விளம்பரத்தில் நடித்துள்ளார். டிவி, கோலிவுட், விளம்பர படம் என்று ஜூலி அடுத்தடுத்து பிசியாகிக் கொண்டிருப்பதை பார்த்து அவரது ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தன்னை பலர் வெறுத்தும் அதை எல்லாம் கண்டுகொள்ளாமல் முன்னேறிச் செல்வது சாதாரண விஷயம் அல்ல என்கிறார்கள் ஜூலி வெறியன்ஸ்.

ஜூலியின் விளம்பர படத்தை பார்த்த ஜூலி வெறியன்ஸ் உன் சமையல் அறையில் நான் உப்பா, சர்க்கரையா என்று கேட்பது போன்ற மீம்ஸ் ஃபேஸ்புக்கில் வலம் வருகிறது. தோல்விகள் காண வெற்றிகள் இல்லை. விழுந்து விட்டால் எழத்தான் வேண்டும் எழுந்து விடடாய் தங்கையை.. மீண்டும் விழுந்தது விடாமல், யார் என்ன சொன்னாலும் கவலை படாமல் உன் சிகரத்தை எட்டு

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!