ஜெ. சிகிச்சை பெற்ற போது அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை.. மீண்டும் அடித்து சொல்லும் ஓபிஎஸ்!

avatar
சென்னை: ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றபோது அவரை அமைச்சர்கள் யாரும் பார்க்கவில்லை என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மீண்டும் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதைத்தொடர்ந்து முதல்வர் மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற போது அவரை அமைச்சர்கள் யாரும் சந்திக்கவில்லை என அவர் மீண்டும் உறுதியாக தெரிவித்தார். தாங்கள் பார்த்தால் ஜெயலலிதாவுக்கு இன்பெக்ஷன் வந்துவிடும் என சசிகலா குடும்பத்தினர் கூறியதாலேயே தாங்கள பார்க்கவில்லை என்றும் ஓபிஎஸ் கூறினார்.

ஜெ.வுக்கு இன்ஃபெக்ஷன் வரக்கூடாது என்ற நல்ல எண்ணத்தில் பார்க்கவில்லை என்றும் ஓ பன்னீர்செல்வம் கூறினார். ஏற்கனவே சசிகலா குடும்பத்தினர் மீது ஏற்பட்ட அதிருப்தியால் ஜெயலலிதா சமாதியில் தியானம் மேற்கொண்டார் ஓபிஎஸ். அப்போது அவர் இதையேதான் கூறினார். ஜெயலலிதா மரணம் தொடர்பாக சசிகலா குடும்பத்தினர் மீது மக்களுக்கு சந்தேகம் உள்ளதாக தான் கூறியதையும் துணை முதல்வர் ஓபிஎஸ் இன்று நினைவு கூர்ந்தார்.

தனி அணியாக பிரிந்து செயல்பட்டபோதும் ஓபிஎஸ், ஜெயலலிதாவை மருத்துவமனையில் சந்திக்க சசிகலா குடும்பத்தினர் யாரையும் சந்திக்கவில்லை என்றே கூறி வந்தார். இந்நிலையில் இன்று அவர் மீண்டும் இதையே கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!