ஊருக்கு செல்லும் போது ஏன் ஃப்ரீசரில் ஒரு நாணயத்தை வைத்து செல்ல வேண்டும் தெரியுமா?

avatar
குழந்தைகளுக்கு தேர்வுகள் முடிந்துவிட்டது. பலரும் வெளியூருக்கு செல்ல திட்டம் போட்டிருப்போம். அப்படி செல்லும் போது, நம் வீட்டில் எத்தனை நாள்/எவ்வளவு நேரம் மின்சாரம் போனது என்று தெரியாது. குறிப்பாக நீங்கள் 1-2 நாட்கள் ஊருக்கு செல்ல திட்டம் தீட்டியிருந்தால், கண்டிப்பாக நம் வீட்டு ஃப்ரிட்ஜில் ஒருசில சமைத்த உணவுகளை வைத்துவிட்டு செல்வோம்.

ஆனால் இனிமேல் தான் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படுமே. நீங்கள் ஃப்ரிட்ஜில் வைத்து சென்ற உணவுப் பொருள் நன்றாக இருக்குமா இல்லை என்று ஒவ்வொரு முறையும் அதை சூடேற்றி பார்த்து தெரிந்து கொள்ள முடியாது. சமைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கத் தான் நாம் ஃப்ரிட்ஜில் வைக்கிறோம். ஆனால் மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், உறைந்து பாழாகும். பின் மீண்டும் மின்சாரம் வந்ததும், உணவு உறைய ஆரம்பிக்கும். எனவே வெளியூர் அல்லது வேறு எங்கேனும் செல்வதாக இருந்தால், உணவை ஃப்ரிட்ஜில் வைத்து செல்லும் பழக்கத்தைக் கைவிடுங்கள்.

மின்சாரம் நீண்ட நேரம் இல்லாமல் இருந்தால், அது உணவில் சால்மோனெல்லா மற்றும் இதர மோசமான பாக்டீரியாக்களைப் பரவச் செய்யும். இதனால் தீவிர ஆரோக்கிய பிரச்சனையால் அவஸ்தைப்படக்கூடும். மின்சாரம் நீண்ட நேரம் இல்லை என்பதை எப்படி அறிவது? நாம் வெளியூர் சென்ற நேரத்தில் நம் வீட்டில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்பதை ஓர் எளிய வழியின் மூலம் அறியலாம். அதுவும் ஒரு நாணயத்தைக் கொண்டு அறிய முடியும்.

மின்சாரம் இல்லாத நேரத்தில், ஃப்ரிட்ஜ் திறக்காமலேயே இருந்தால், ஃப்ரிட்ஜில் வைத்த உணவு குறைந்தது 4 மணிநேரம் வரை பாழாகாமல் இருக்கும். இதற்கு ஃப்ரிட்ஜில் இருக்கும் குளிர்ச்சியான வெப்பநிலை தான் காரணம். ஃப்ரீசரில் உணவை வைத்து, ஃப்ரீசர் முழுமையான குளிர்ச்சியில் இருந்தால், 48 மணிநேரம் வரை உணவு பாழாகாமல் இருக்கும். அதுவே ஃப்ரீசர் பாதி குளிர்ச்சியில் இருந்தால், 24 மணிநேரம் வரை ஃப்ரீசரில் வைத்த உணவு கெட்டுப் போகாமல் இருக்கும்.

ஒரு கண்ணாடி கப்பில் நீரை நிரப்பி, அதை ஃப்ரீசரில் வைத்து நன்கு உறைய வைக்க வேண்டும். பின் வெளியூர் செல்லும் போது, அந்த கப்பின் மேல் ஒரு நாணயத்தை வைத்து மீண்டும் ஃப்ரிட்ஜில் வையுங்கள். வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பும் போது, நாணயம் எங்குள்ளது என்று பாருங்கள்.

நாணயம் அந்த கப்பின் மேற்பகுதியில் அல்லது நடுவில் இருந்தால், சிறிது நேரம் தான் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது என்று அர்த்தம். ஒருவேளை அந்த நாணயம் கப்பின் அடிப்பகுதியில் இருந்தால், நீண்ட நேரம் மின்சாரம் இல்லாமல் இருந்துள்ளது என்று அர்த்தம். இந்நிலையில் ஃப்ரிட்ஜில் உள்ள உணவை சாப்பிடவேக் கூடாது.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!