ஜெ. சிகிச்சை வீடியோவில் உள்ள மரம் போயஸ் கார்டனில் உள்ளது.. ஆனந்தராஜ் பரபர பேட்டி

avatar
சென்னை: ஆர்.கே நகர் தேர்தலுக்கு முதல் நாள் டிசம்பர் 20ம் தேதி டிடிவி தினகரன் அணியைச் சேர்ந்த வெற்றிவேல், ஜெயலலிதா அப்பல்லோவில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டார். இந்த வீடியோ தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜெயலலிதா சிகிச்சை வீடியோவில் சந்தேகம் இருக்கிறது என நடிகர் ஆனந்தராஜ் பேட்டி அளித்து இருக்கிறார். மேலும் இந்த வீடியோவிற்கு பின் பெரிய சதி இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும் அவர் தனது பேட்டியில் தினகரன் குறித்தும் பேசியுள்ளார். அதேபோல் அதிமுக கட்சியில் நடக்கும் மாற்றங்கள் குறித்தும் பேசியுள்ளார்.

தற்போது இந்த வீடியோ குறித்து நடிகர் ஆனந்தராஜ் பேசி இருக்கிறார். அவர் தனது பேட்டியில் ''வெற்றிவேல் வெளியிட்ட ஜெ. சிகிச்சை வீடியோவில் சந்தேகம் இருக்கிறது. வீடியோவில், எந்த தேதி, என்ன நேரம் என்று குறிப்பிடப்படவில்லை, இது பெரிய சந்தேகத்தை உருவாக்குகிறது'' என்று கூறியுள்ளார். மேலும் ''சிகிச்சை பெறும் வீடியோவின் பின்னணியில் உள்ள மரம் போயஸ் இல்லத்தில் உள்ளது. எனவே அந்த இடம் அப்பல்லோ என்று கூறமுடியாது. வீடியோவை இவ்வளவு நாள் வைத்திருந்தாலே அதில் சதி உள்ளது என்றுதானே அர்த்தம்.'' என்றும் குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்.

தினகரன் குறித்து பேசிய இவர் ''தினகரன் ஆதரவாளர்கள் பலரும் கட்சியிலிருந்து நீக்கப்படலாம். தவறு செய்தவர்கள் மனம் திருந்தி அதிமுகவுக்கு விசுவாசமாக இருக்க வேண்டும். அரசியலில் நிலையில்லாமல் பேசும் தினகரன் பின் ஏன் சிலர் செல்கிறார்கள் என்று தெரியவில்லை'' என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். ஜெயலலிதா மரண விசாரணை குறித்து பேசிய ஆனந்தராஜ் ''ஜெ மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் மீது மக்கள் பெரும் நம்பிக்கை வைத்திருக்கிறார்கள். சசிகலாவிடம் ஆணையம் விளக்கம் கேட்டதற்கும், விசாரணை செய்ததற்கும் பாராட்டுக்கள்'' என்று கூறியுள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!