ஆன்மீக அரசியல் என்பது தமிழக மக்கள் காதில் பூ சுற்றும் செயல்! - இயக்குநர் கவுதமன்

avatar
சென்னை: நடிகர் ரஜினிகாந்த் அரசியல் வருகையை அவரது ரசிகர்கள் வரவேற்றுள்ளனர். இந்நிலையில் ரஜினியின் வருகைக்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது. ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு இயக்குநர் கவுதமன் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். ரஜினி அரசியலுக்கு வருவது தமிழக மக்களை முட்டாளுக்கும் செயல் என அவர் தெரிவித்துள்ளார்.

ரஜினி அரசியல் அறிவிப்பு தமிழக மக்களின் காதில் பூ சுற்றும் செயல் என்றும் அவர் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும் எங்களுக்காக எங்கள் மண்ணில் உருவான ஆன்மீகவாதி வள்ளலார் என்றும் சாதி மதம் இருக்கக்கூடாது என்றவர் வள்ளலாளர் என்றும் கவுதமன் தெரிவித்தார். மேலும் ரஜினியை நீங்கள் எங்கள் மண்ணை சேர்ந்தவர் இல்லை என்றும் பாபா எங்களின் கடவுள் இல்லை என்றும் அவர் கூறினார். தமிழ் மண்ணுக்கு சம்பந்தம் இல்லாத ரஜினி எப்படி தமிழ் மக்களுக்காக போராடுவார் என்றும் அவர் கூறினார்.

விவசாயிகள் தற்கொலை செய்துகொண்ட போது ரஜினி வாய்திறக்கவில்லை என்றும் ஓகி புயலால் மீனவர்கள் பாதிக்கப்பட்டபோது தனது நண்பர் பிரதமர் மோடியிடம் பேசி ரஜினி உதவிகேட்வில்லை என்றும் அவர் குற்றம்சாட்டினார். மேலும் தனது நண்பரான பிரதமர் மோடியிடம் பேசி காவிரி மோலாண்மை வாரியம் அமைக்க கூற வேண்டியதுதானே என்றும் கவுதமன் கேள்வி எழுப்பினார். ரஜினியை பின்னால் இருந்து இயக்குவது பாஜகதான் என்றும் கவுதமன் குற்றம்சாட்டினார். ரஜினி தமிழக மக்கள் மீது போர் பிரகடனம் செய்துள்ளாரர் என்றும் கவுதமன் தெரிவித்துள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!