'கலகலப்பு 2' செல்ஃபி பாடல் மேக்கிங் வீடியோ

avatar
சென்னை: 2012-ஆம் ஆண்டில் வெளியான 'கலகலப்பு' படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் படம் 'கலகலப்பு 2'. இந்தப் படத்தை அவ்னி சினி மேக்ஸ் சார்பில் குஷ்பு சுந்தர் தயாரித்து வருகிறார்.

முழுக்க முழுக்க காமெடி கதையாக உருவாகி வரும் இப்படத்தில் ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, கேத்தரின் தெரசா, நிக்கி கல்ராணி, விடிவி கணேஷ், யோகி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பெரும் நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளார்கள்.

படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு அக்டோபர் மாதம் காரைக்குடியில் தொடங்கியது. அதனை தொடர்ந்து காசி, புனே, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் விறுவிறுப்பாக நடைபெற்றது. தற்போது முழு படப்பிடிப்பும் முடிந்து விட்டதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். 'கலகலப்பு 2' படத்தில் இடம்பெறும் 'ஒரு குச்சி.. ஒரு குல்ஃபி' பாடலின் மேக்கிங் வீடியோவை அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளனர். செல்ஃபி பாடலாக உருவாகியிருக்கும் இந்தப் பாடல் குத்தாட்டத்தோடு தயாராகி இருக்கிறது.

இந்தப் பாடலின் மேக்கிங் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது. செல்ஃபி பாடல் வரிசையில் இந்தப் பாடல் முக்கிய இடத்தைப் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'கலகலப்பு 2' படத்துக்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!