இதனால் என் கெரியரே நாசமா போனாலும் பரவாயில்லை: ஜெய் பட இயக்குனர் பரபர போஸ்ட்

avatar
சென்னை: பலூன் பட தாமதம், நஷ்டம் குறித்து இயக்குனர் சினிஷ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் போஸ்ட் போட்டுள்ளார். சினிஷ் இயக்கத்தில் அஞ்சலி, ஜெய், ஜனனி ஐயர் உள்ளிட்டோர் நடித்த பலூன் படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் படம் ஹிட் ஆனாலும் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று ஃபேஸ்புக்கில் போஸ்ட் போட்டுள்ளார் இயக்குனர். இது குறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது,

பலூன் ஹிட்.. தயாரிப்பாளர்கள் மகிழ்ச்சியாக உள்ளனர், நானும் மகிழ்ச்சி தான். ஆனால் தனிப்பட்ட முறையில் இந்த மகிழ்ச்சியை கொண்டாடும் நிலையில் நான் இல்லை. சிலரின் ஈடுபாட்டால் இந்த ப்ராஜக்ட் நாசமாகிவிட்டது. இந்த துறையில் உள்ள சிலரால் தாமதம் ஏற்பட்டு பட்ஜெட் அதிகரித்து தயாரிப்பாளருக்கு நஷ்டம் ஆனது. இயக்குனர், ஹீரோ, ஹீரோயின், துணை நடிகர்கள், டெக்னீஷியன்கள், வினியோகஸ்தர்கள் அல்லது தயாரிப்பாளர்கள் என யாராக இருந்தாலும் நஷ்டத்திற்கு காரணமாக இருந்தால் அதன் பின்விளைவுகளை சந்திக்க வேண்டும்.

கடின உழைப்பை நம்புவோருக்கான இடம் இது. சிலர் அம்மாவாச சத்யராஜ் மாதிரி வந்து வளர்ந்து அதன் பிறகு ஓவராக செய்கிறார்கள். அண்மையில் ஒரு தயாரிப்பாளர் தனது பட நஷ்டம் பற்றி கூறியும் யாராலும் எதுவும் செய்ய முடியவில்லை. இது போன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்கக் கூடாது.

நான் நேர்மையாக இருக்க விரும்புகிறேன். இந்த அறிக்கையால் என் கெரியரே நாசமாக போனாலும் மகிழ்ச்சியுடன் ஏற்பேன். காரணம் ஒரு முதலீட்டாளராக பணத்தை இழக்கும் வலி எனக்கு தெரியும். என்னிடம் ஆதாரம் உள்ளது. தேவைப்படும்பது போது அவற்றை சமர்பிக்க நான் தயார். அதனால் தாமதம் மற்றும் நஷ்டத்திற்கு காரணமானவர்கள் தானாக முன்வந்து பொறுப்பேற்று தயாரிப்பாளருக்கு பணம் கொடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார் சினிஷ்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!