பொன்வண்ணன் ராஜினாமா கடிதத்தில் எழுதியிருந்த விபரம்!

avatar

சென்னை: நடிகர் சங்க துணைத் தலைவர் பதவியை ராஜினாமா செய்வதாகக் கூறி நடிகர் பொன்வண்ணன் கடிதம் அளித்துள்ளார். நடிகர் சங்க பொதுச் செயலாளர் விஷாலின் அரசியல் செயல்பாடு குறித்து பலரும் தன்னிடம் கருத்து கேட்பதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பொன்வண்ணன் அளித்துள்ள ராஜினாமா கடிதத்தின் விபரம் தெரிய வந்துள்ளது. அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,

நமது "செயலாளர்"ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு விண்ணப்பித்திருப்பதை தொலைக் காட்சியில் பார்த்து அதிர்ச்சியடைந்தேன். கடந்த கால நிர்வாகிகளை இதை காரணம் காட்டி, குறைசொல்லி, பொறுப்புக்கு வந்த நாம், அதே தவறை செய்வது சரியா..? இதனால் எதிர்காலத்தில் அரசியலற்ற "நடிகர் சங்க தலைமை" என்ற நம்பிக்கையே அடிபட்டு போகிறது.

வருகிற ஐனவரி 7-ம் தேதி மலேசியாவில் நடக்கிற கலை நிகழ்ச்சிக்கு 200-க்கும் மேற்பட்ட நடிகர்களை அழைத்து போக வேண்டியுள்ளது. நிகழ்ச்சி பற்றி பல விவாதங்கள் செய்ய வேண்டியுள்ளது. அதையெல்லாம் உடனிருந்து திட்டமிடுவதை விட்டு, தேர்தல் களத்திற்கு சென்று விட்டால், இங்கே பொதுச் செயலாளர் வேலையை, முடிவை யார் எடுப்பார்கள்? எனவே, இதற்குபின் இப்பொறுப்பில் இருந்தால், எதிர் காலத்தில் என் தனித்தன்மையை இழப்பதுடன், முரண்பாடான மன நிலை யிலும் செயல்பட வேண்டி வரலாம். அது தற்போதைய நிர்வாக செயல்பாட்டிற்கு தடையாக மாறும்.

உடன்பாடில்லாத விசயங்களில் மவுனம் காப்பது, அல்லது வீண் விவாதங்களில் ஈடுபடுவது இரண்டுமே ஆரோக்கியமான தல்ல.! எனவே "துணைத் தலைவர்"பொறுப்பிலிருந்து விலகிக் கொள்கிறேன் என்று பொன்வண்ணன் தனது ராஜினாமா கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

EyesTube | SPONSORED CONTENTS

RECOMMENDED CONTENT

RECOMMENDED CONTENT

RANDOM AD CONTAINER
Advertise Now!

LATEST TOPICS UPDATES


RANDOM AD CONTAINER
Advertise Now!